2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பாசையூர் அந்தோனியர் திருவிழா

Menaka Mookandi   / 2015 ஜூன் 14 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா, சனிக்கிழமை (13) இடம்பெற்றது. பாசையூரைச் சேர்ந்த பாகிஸ்தான் குறேற்றா மாவட்டத்தின் ஆயரான விக்டர் ஞானபிரகாசம் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

அதில் இந்திய திருச்சியில் இருந்து வருகை தந்த அருட்தந்தை அல்பட் அடிகளார் மற்றும் கேரளாவில் இருந்து வருகை தந்த சகோதரர் சாயூ ஆகியோரும் நவநாட் திருப்பலிகளை ஒப்புகொடுத்ததுடன் திருவிழா திருப்பலியிலும் பங்கேற்றனர்.

மாலை இடம்பெற்ற ஆராதனைகளை தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .