2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

திருச்சொரூப பவனி

Thipaan   / 2015 ஜூன் 13 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவையொட்டிய புனிதரின் திருச் சொரூப பவனி நேற்று வெள்ளிக்கிழமை மாலை (12) நடைபெற்றது.

நேற்றைய நவநாள் (12) ஆராதனையை அருட்பணி ஜே.எச்.டி. நிர்மல் சூசை நிகழ்த்தினார்.

மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ. தேவதாசன் தலைமையில் திருச்சொருப பவனி திருத்தலத்திலிருந்து ஆரம்பமாகி முனை வீதி, மத்திய வீதி, ஆஸ்பத்திரி வீதி, கோவிந்தன் வீதி, சென். மைக்கல் வீதி வழியாக தேவாலயத்தை வந்தடைந்தது.

தேவாலயத்தின் வருடாந்த திருவிழா (04.06.2015) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .