2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும்

Sudharshini   / 2015 ஜூன் 13 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

தெல்லிப்பளை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் சனிக்கிழமை (13) இடம்பெற்றது.

அதிகாலையில் இடம்பெற்ற பொங்கல்கள் படையல்கள் மற்றும் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வேள்வி நிகழ்வுகள் இடம்பெற்றன.

தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள்  கிடாய்களை பரிசோதனை செய்து அனுமதி வழங்கிய நிலையில் கிடாய்கள் மற்றும் சேவல்கள் வெடடப்பட்டு பலியிடப்பட்டன.

குறிப்பாக சுமார் இருநூற்று ஐம்பது தொடக்கம் முன்னூறு கிடாய்கள் வரையிலும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சேவல்கள் வெட்டப்பட்டதுடன் உயிருடன் ஆலயத்திற்கும் சேவல்கள் நேர்த்தியின் நிமித்தம் வழங்கப்பட்டன.

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வேள்வியில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .