2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆவரங்கால் சிவன்கோவில் இராஜகோபுர கும்பாபிஷேகம்

Sudharshini   / 2015 ஜூன் 13 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

ஆவரங்கால் சிவன்கோவிலின் அம்மன் வாசலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து தளங்களைக் கொண்ட இராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம்  வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது.

கும்பாபிஷேகக் கிரியைகள் ஆலயப் பிரதம குரு வண.ந.யோகானந்தேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து விரிவுரையாளர் ச.லலீசன் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஆகியோரின் ஆசியுரைகள் இடம்பெற்றன.

ஆவரங்கால் சிவன் கோவில் மீது கலாபூஷணம் கோப்பாய் சிவம் இயற்றிய கீர்த்தனைகள் அடங்கிய நூல் வெளியீடு செய்யப்பட்டது. நூலை செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் வெளியிட்டு வைத்தார்.

கோபுரத்தை நிர்மாணித்த சிற்பி தமிழகம் சீர்காழியைச் சேர்ந்த க.புருஷோத்தமன் பொன்னாடை போர்த்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் தில்லைநாதனால் வாழ்த்துப்பா வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

பாடல்களை யாத்த கோப்பாய் சிவம் ஆலய பரிபாலன சபைச் செயலர் நீ.மயில்வாகனத்தால் வாழ்த்துப்பா வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .