Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 08 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் தேவஸ்தானத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை(08) காலை சிறப்பாக நடைபெற்றது.
பல் மதத்தினரும் வாழும் இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் பலநூறு வருடங்களுக்கு முன்னர் வேலாக அவதரித்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ பாலமுருகன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது.
சர்தேச இந்துமதகுருபீடாதிபதி சபரிமலைக்குரு முதல்வர் பிரதிஸ்டா சிரோன்மணி சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் கிரியைகள் நடைபெற்றன.
கிரியைகளில் வெள்ளிக்கிழமை மஹா யாகம் ஆரம்பிக்கப்பட்டு நவகுண்டங்களில் யாகம் வளர்க்கப்பட்டுவந்துடன் சனிக்கிழமை (06) அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமானது. பிரதான கும்பத்துக்கு விசேட பூஜைகள் நடைபெற்று யாகம்,வேதபராயணங்கள் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலதாஸ்தான கோபுரத்துக்கு அடியார்களின் ஆரோகரா கோசத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க வேதபராயணங்களுடன் மஹா கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.
மூலதாஸ்தான கோபுர கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து பரிபால ஆலயங்களுக்கும் மணிகோபுரத்துக்கும் கும்பாபிசேகம் நடைபெற்றது.
இதன்போது பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலமூர்த்தியாக வேலாக அமர்ந்துள்ள முருகப்பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
17 minute ago
39 minute ago
1 hours ago