2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கல்யாணக்கால் வெட்டும் வைபவம்

Thipaan   / 2015 ஜூன் 03 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கில் கல்யாணக்கால் வெட்டும் வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை(02) சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது கல்யாணக்கால் வெட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பகுதியில் திருக்கல்யாண நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டனர்.

கிராமத்தில் தமிழர்களின் பண்பாடுகளை ஒட்டியதாக மேற்கொள்ளப்பட்டுவரும் திருமண நிகழ்வுகளை ஒத்ததாக இந்த நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .