2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தியின் இறுதி நாள் சடங்கு

Sudharshini   / 2015 ஜூன் 03 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தியின் இறுதி நாள் சடங்கு நிகழ்வுகள் பொங்கல் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளுடன் நேற்று சனிக்கிழமை (02) நிறைவுற்றது.

கடந்த 28ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திகளை நிறைவுசெய்தனர்.

ஆலய வழிபாட்டு கிரியைகளை பூசகர் க.ரவிந்திரநாதன் நடாத்தி வைத்தார்.

இதேவேளை, கண்ணகி கிராமத்தின் இராணுவப் பொறுப்பதிகாரி லெப்டினன் டி.பி.எஸ். பியசிறி தலைமையில் கட்டளை அதிகாரி மேஜர் டி.யு.வீரசிங்கவின் வழிகாட்டலின் கீழ் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் வழிகாட்டலில் தாகசாந்திக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .