2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் ஸ்ரீ ஜகநாதர் ரத யாத்திரை

Gavitha   / 2015 மே 24 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

ஸ்ரீ கிருஷ்ணபகவான், துவாரகைபுரியிலிருந்து பிருந்தாவனம் நோக்கிச் சென்றதை நினைவு கூர்ந்து ஸ்ரீ ஜகநாதர் ரத யாத்திரை மட்டக்களப்பு நகரில் சனிக்கிழமை (23) இடம்பெற்றது.

அகில உலக கிருஷ்ணபக்கி இயக்கத்தின் மட்டக்களப்பு நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இங்கிலாந்து பக்தி விகாஸ சுவாமி மற்றும் மட்டக்களப்பு நிலையத்தின் தலைவர் வாசுதேவதத்தாஸ்  தலைமையில் நடைபெற்றது.

இன்று மாலை ஊறணி சந்தியில் கிருஷ்ண பகவானுக்கு பூஜைகள் இடம்பெற்று ஆரம்பமான ரத பவனி திருமலை வீதி, அரசடிச்சந்தி, காந்தி சதுக்கம் வரை சென்று பஜனை மற்றும் கலைநிகழ்வுகள் மற்றும் சொற்பொழிவு நடைபெறும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்துக்குச் சென்றது.

அகில உலக கிருஷ்ணபக்கி இயக்கத்தின் மட்டக்களப்பு நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மட்டக்களப்பு மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த கிருஷ்ணபகவானின் பக்தர்கள் பஜனைகள் பாடியபடி வடம்பிடித்திழுத்துச் சென்றனர்.

அகில உலக கிருஷ்ணபக்கி இயக்கத்தின் மட்டக்களப்பு நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வேதாந்த சுவாமி பிரபுபாதர் இவ்விழாவை  உலகெங்கும் நடைபெறச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .