2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நன்றி செலுத்தும் கூட்டுத் திருப்பலி

Gavitha   / 2015 மே 16 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

ஜோசப்வாஸ் அடிகள் இலங்கையின் முதல் புனிதராக திருநிலைப் படுத்தப்பட்டமைக்கு நன்றி செலுத்தும் கூட்டுத் திருப்பலி,  தாண்டவன்வெளி புனித ஜோசப்வாஸ் வித்தியாலய வளாகத்தில்  வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு கலாநிதி ஜோசப் பொன்னையா, தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை அலெக்ஸ் ரொபின்சன், மறை மாவட்ட குரு முதல்வர் ஏ. தேவதாசன் ஆகியோர் கூட்டத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

இந்த ஆராதனையில்; மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது புனிதரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த பாப்பாண்டவர், ஜோசப்வாஸ் அடிகளாரை இலங்கையின் முதலாவது புனிதராக திருநிலைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .