2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இந்திரவிழா...

Princiya Dixci   / 2015 மே 07 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் திருவிழாவின் இறுதிநாளான தீர்த்ததிருவிழா அன்று 'கண்டறியா விழா' என்று அறியப்படுகின்ற இந்திரவிழா, திங்கட்கிழமை (04) கொண்டாடப்பட்டது.

வல்வெட்டித்துறை ஊறணி தொடக்கம் ஊரிக்காடு வரையிலான 03 கிலோமீட்டர் தூரத்துக்கு வீதியின் இரு மருங்கிலும் வாழைகள், மூங்கில்கள் கட்டப்பட்டு பிரமாண்டமான மின்னலங்காரங்களுடன்  மக்கள் வெள்ளம் திரள 08 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு இசை, நடன நிகழ்ச்சிகள் இதன்போது இடம்பெற்றன.

ஊறணி தீர்த்தக் கடற்கரையில் கடலுக்குள் மேடை அமைக்கப்பட்டும் குச்சம் ஒழுங்கைக்கு முன்னால் தொங்குபாலம் அமைக்கப்பட்டும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மேலும், நெடியகாட்டில் பிரமாண்ட பிள்ளையார் உருவமும் வேம்படியில் சிவனும் வல்வெடித்துறை சந்தியில் பிரமாண்ட சிவலிங்கம் மற்றும் பொம்மை உருவங்களும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: சண்முகன் முருகவேல்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .