2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

செபமாலை அன்னை திருத்தலத்தின் வருடாந்த திருவிழா

Sudharshini   / 2015 மே 02 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

பெரியபுல்லுமலை செபமாலை அன்னை திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய பாதயாத்திரை மட்டக்களப்பிலிருந்து வெள்ளிக்கிழமை (01) ஆரம்பமானது.

புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து 47 கி.மீ தூரத்தில் பெரியபுல்லுமலை செபமாலை அன்னை திருத்தலம் அமையப்பெற்றுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தடைப்பட்டிருந்த யாத்திரை, மீண்டும் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பேராலயத்தின் பங்குத்தந்தை ஏ. தேவதாசன் தெரிவித்தார்

கடந்த 4 வருடங்களாக பாரம்பரிய புனித யாத்திரை தொடர்ச்சியாக இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) வருடாந்த திருவிழா இடம்பெறவுள்ளதோடு கடந்த 24.04.2015 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .