2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தேர்த்திருவிழா

Thipaan   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 15ஆம் நாளன்று தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

காலை 8.30 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து காலை  9.30 மணியளவில் சுவாமி தேரில் ஏறினார். அதனைத் தொடர்ந்து சுமார் 11.00 மணியளவில் பிள்ளையார் தேர் வடத்தை பெண்கள், சிறுவர்கள் இழுக்க மற்றைய தேர்களை ஆண்கள் பலரும் இழுத்தனர்.

சுவாமிகள் பஞ்ச ரதங்களில் ஏறி வீதி உலா வருகை நண்பகல் அளவில் இடம்பெற்றிருந்தது. இப் பஞ்சரத பவனியைக் காண ஏராளமான பக்தர்கள் இத்தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

தேர் திருவிழா முடிவடைந்ததும் பக்தர்களுக்கு இரு அன்னதான மடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .