2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் காட்சி

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் காட்சி  மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில், நேற்று  வெள்ளிக்கிழமை (03) இரவு காண்பிக்கப்பட்டது.

புனித வெள்ளி திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை தலைமையில் நேற்று மாலை 5.30 மணிக்கு புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனை இடம்பெற்றதுடன் இரவு 8 மணியளவில் திருப்பாடுகளின் காட்சிகள் காண்பிக்கப்பட்டது.

குறித்த சடங்குகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்கியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .