2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

193ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவின் நிறைவு

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசலின் 193ஆவது வருடாந்த கொடியேற்ற விழா வியாழக்கிழமை (02) மாலையுடன் நிறைவு பெற்றது.

இஸ்லாமிய பெரியார் அப்துல் காதிர் நாகூர் சாஹுல் ஹமீது மீராசாஹிப் வலியுல்லாஹ்வின ஞாபகார்த்தமாக 193ஆவது வருட கொடியேற்ற நிகழ்வு, கடந்த பன்னிரெண்டு நாட்கள் தொடர்ந்தும் நடைபெற்றது.

இவ்விழாவில், சன்மார்க்கப் பிரசாரங்கள், திக்று, ராத்திபு, மௌலித் ஆகிய விடயங்கள் இடம் பெற்றதுடன், இவ்விழாவின் இறுதி நாளான்று கொடி இறக்கப்பட்டு விஷேட துஆப்பிரார்த்தனையுடன் கந்தூரி அன்னதானமும் இடம் பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .