2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ ராஜ கணபதி ஆலய தேர் உற்சவம்

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க மண்முனை, உலகநாச்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ ராஜ கணபதி ஆலயத்தின் தேர் உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை(03) சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையின் முதல் பெண் அரசியான மண்முனையை தளமாக கொண்டு ஆட்சிசெய்த உலகநாச்சியினால் உருவாக்கப்பட்ட ஆலயமே உலகநாச்சிபுரம் அருள்மிகு ஸ்ரீராஜகணபதி ஆலயமாகும்.
அசாதாரண சூழ்நிலையினால் இவ் ஆலயம் பல ஆண்டுகாலமாக அழிவடைந்து இருந்து.

அண்மையில் ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அலங்கார உற்சவம் நடைபெற்றுவந்தது.

கடந்த 10 தினங்களாக ஆலயத்தின் வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்துடன் தினமும் ஆலயத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வந்தது.

நேற்று காலை கணபதிக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் சுவாமி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தேரடியில் விசேட கிரியைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து ஆலயத்தின் தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றதுடன் பெண்கள் ஒருபகுதியாகவும் ஆண்கள் ஒரு பகுதியாகவும் தேரின் வடக் கயிறை இழுத்துவந்தனர்.

தேர் ஆலயத்தினை வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட அபிஷேகம் நடாத்தப்பட்டதுடன் பூஜைகளும் நடத்தப்பட்டன.

இந்த தேர் உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் கலந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .