Kanagaraj / 2015 மார்ச் 03 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி ஆதிபாராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் 15ஆவது ஆண்டு நிறைவும் பங்காரு அடிகளாரின் பவள விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் காலை 7.00மணிக்கு பாத பூசையுடன் ஆரம்பமாகி 8.00மணியளவில் வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பங்காரு அடிகளாரின் திருவுருவம் தாங்கியநிலையில் ஆயிரக்கணக்கான பெண் அடியார்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
களுவாஞ்சிகுடி நகரினை சூழ இந்த ஊர்வலம் நடைபெற்றதுடன் இந்த ஊர்வலமானது வழிபாட்டு மன்றத்தினை வந்ததும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் 75 திருவிளக்குகள் ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது.
இதன்போது ஆதிபாராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு மற்றும் பங்காரு அடிகளாரின் 75ஆவது பவள விழாவினை முன்னிட்டு 300 வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப்பொருட்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து ஆன்மீகவுரைகளும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago