2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பன்னிரு ஜோதிலிங்க தரிசனம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தினரின் ஏற்பாட்டில் பன்னிரு ஜோதிலிங்க தரிசன நிகழ்வு திருகோணமலை விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதசுவாமி சிவன் ஆலய வீதியில் ஞாயிற்றுக்கிழமை(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்; கலந்து சிறப்பித்தார்.

அடியார்கள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஜோதிலிங்கத்தை தரிசிக்க முடியும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
 
இந்தியாவின் பிரசித்தமான சிவ ஆலயங்களான சோமநாத், மல்லிகார்ஜீன், மகா காலேஸ்வரர். ஓங்காரேஸ்வரர், கெதர்நாதர், பிமாசங்கர்,  கிருஷ்ணேஸ்வரர், இராமேஸ்வரம், நாகேஸ்வரர், வைத்தியநாதர், திரியம்கேஸ்வரம், விஸ்வநாதர் ஆலயங்களிலுள்ள லிங்கங்களுக்கு ஒப்பான அதேவடிவான லிங்கங்கள் இங்கு அடியார்களின் தரிசனத்துக்கு வைக்கப்படடுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .