2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

குருத்துவ திருநிலைப்படுத்தல்

Gavitha   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


குருத்துவ திருநிலைப்படுத்தல் வழிபாட்டு கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்றது.

இதன்போது, அருட்சகோதரர்களான ஜூனோ சுலக்சன் மற்றும் ஜெரிஸ்டன் வின்சன்ட் அருட் தந்தையர்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பு அம்பாறை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா தலைமையில் அருட்தந்தையர்கள் குருத்துவ திருநிலைப்படுத்தல் வழிபாட்டு ஆராதனையை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் பேராலயத்துக்கு பூஜைப்பொருட்கள் வழங்கப்பட்டு செபம் மேற்கொள்ளப்பட்டது. திருப்பலியின்போது கலந்துகொண்டவர்களுக்கு சப்பிரசாதம் வழங்கப்பட்டது.

வருகை தியான, தூய ஆவி, அபிஷேக, காணிக்கை, திருவிருந்து மற்றும் நன்றிப் பாடல்கள் பாடல் குழுவினரால் பாடப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .