2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சாட்சனை கிரியைகள்

Thipaan   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 

அக்கரைப்பற்று வாச்சிக்குடா அருள்மிகு ஸ்ரீராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சாட்சனை கிரியைகள் இன்று சனிக்கிழமை(13) ஆரம்பமாகின.

ஆஞ்சநேய ஜெயந்தி தினமான 22ஆம் திகதி நடைபெறவுள்ள 108 அஷ்டோத்திர சங்காபிஷேகமும், தேங்காய் துருவல் சக்கரை சாத அபிஷேக நிகழ்வை முன்னிட்டு கிரியைகள் இடம்பெறுகின்றன.

காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் ஆசிர்வாதத்தோடு மலேசியாவை சேர்ந்த ராம்ஜி சுவாமிகளின் வழிகாட்டலின் கீழ் நடைபெறுகின்றன.

கிரியைகள் யாவும் கிரியா கலாநிதி சிவஸ்ரீ க.கு.லோகநாதக்குருக்கள் மற்றும் சிவஸ்ரீ இரா சுந்தரமூர்த்தி சர்மா ஆகியோர் நடாத்தி வைப்பதுடன் தினமும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .