2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஆராதனைக்கூடம் அங்குரார்ப்பணம்

Thipaan   / 2014 நவம்பர் 30 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் தேவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நற்கருணை ஆராதனைக் கூடம், மட்டக்களப்பு அம்பாறை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையாவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது.

தேவாலயத்தில் இடம்பெற்ற திருப்பலியின் பின்பு புதிய நற்கருணை ஆராதனைக் கூடத்தில் உள்ள பீடத்தில் கதிர்ப் பாத்திரத்தை ஆயர் நிறுவினார்.

புளியடிக்குடா புனித செபஸ்தியார் தேவாலய பங்குத் தந்தை எஸ். அகில்ராஜ், வண்ணத்தப் பூச்சிகள் சிறுவர் பூங்காவின் பணிப்பாளர் அருட்தந்தை கலாநிதி போல் சற்குணநாயகம், அருட்தந்தையர்களான ரி.சகாயநாதன், ரி.ஜீவராஜ் மற்றும் திருத்தொண்டர் வின்சன் ஜெரிஸ்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .