2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தேவமாதாவின் பிறந்ததினத்தையொட்டி ஆசி வேண்டி பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


தேவமாதாவின் பிறந்ததினத்தையொட்டி மட்டக்களப்பு நகர எல்லை வீதியிலுள்ள வீடொன்றின் குடும்பத்தினருக்கு ஆசி வேண்டி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை  பிரார்த்தனை இடம்பெற்றது.

தேவாலயம் அமைந்துள்ள பங்கு மக்களின் வீடுகளில் மாதாவின் சொரூபம் ஒரு வீட்டுக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் எடுத்துச் செல்லப்பட்டு பங்குத்தந்தையால் மாதாவை கையிலேந்தி ஆசீர்வாதம் செய்யபட்டது.

தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலய பங்குத் தந்தை சி.அன்னதாஸ் தலைமையில் குடும்பத்தினருக்கு  ஆசி வேண்டிய பிரார்த்தனையில் அருட்சகோதரிகள், பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

மாதாவின் பிறத்ததினம் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .