2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

பிதிர்க்கடன் கிரியைகள்

Thipaan   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று கடற்கரை பிரதேசத்தை அண்டியுள்ள ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில், இறந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிரார்த்திக்கும் பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரியைகள் திங்கட்கிழமை(22) காலை 8மணிமுதல் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.

இறந்துபோன எமது உறவுகளின் ஆத்மசாந்திவேண்டி பிராhத்திக்கும் பிதிக்ர்கடன் நிறைவேற்றும் இவ்வருட மகாளயபட்ச காலம் கடந்த 9ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையாகும்.

இக்காலத்தில் இறந்துபோன ஆத்மாக்கள் தாங்கள் வாழ்ந்த மனைகளுக்கு வந்துபோவதாக சமயநூல்கள் கூறுகின்றன.

இக்காலத்தில் பிதிhக்;கடன் நிறைவேற்றுவதால் இறந்தவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு அவர்கள் எம்மை ஆசிர்வதிப்பதாகவும் கூறப்படுகின்றது.
அதனால் எமக்கு சகல சௌக்கியங்களும் உண்டாகின்றது.

ஆகவே, மகாளயபட்ச காலத்தில் பிண்டம் போடுதல், எள்ளும் தண்ணீரும் இறைத்தல் போன்ற பிதுர்கடன் நிறைவேற்றும் நிறைவு செய்யும் ஒழுங்குகள் சிவஸ்ரீ.க. லோகநாதக்குருக்கள் தலைமையில் நாகதம்பிரான் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்வாக சபையினர் பிதிர்க்கடன் நிறைவேற்றி சௌக்கியமாக வாழுமாறும் அன்போடு அழைக்கின்றனர்.



You May Also Like

  Comments - 0

  • sunder Monday, 03 August 2015 02:01 PM

    அறியாததை அறிந்துகொண்டேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X