2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

யாக சாலைக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
, வடிவேல்- சக்திவேல்

மட்டக்களப்பு – திருப்பெருந்துறை ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலயத்தின் யாக சாலைக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (19) ஆலய பரிபாலன சபைத் தலைவர் சாரங்கபாணி அருள்மொழி தலைமையில் இடம்பெற்றது.

இவ்வாலயம் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்தது என்று நம்பப்படுவதாக திருப்பெருந்துறை ஸ்ரீ முத்துக்குமார சுவாமி பரிபாலன சபைத் தலைவர் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர், முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். அருணகிரிநாதன், திருப்பெருந்துறை கிராம சேவை உத்தியோகத்தர் ஏ. லிங்கநாதன், ஆலய குருக்கள் மற்றும் திருப்பெருந்துறைக் கிராம இந்து மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த யாக சாலை நிர்மானத்துக்கு நன்கொடை செய்ய விரும்பும் பக்த அடியார்கள், அதனை ஆலய அறக்கட்டளை நிதியத்துக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X