2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் இறுதி நாள் பெருவிழா

Gavitha   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


அம்பாறை, சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 206ஆவது வருடாந்த பெருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (14) கொடியிறக்கதுடன்  நிறைவுபெற்றது.

 கடந்த 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை (12) கொடியேற்றத்துடன் ஆராம்பமாகி ஒன்பது தினங்களாக நவநாள் வழிபாடுகள் நடைபெற்றன.
 
திருச்சிலுவை திருத்தல பங்குதந்தை ஏ.யேசுதாசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்வில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை கலந்து கொண்டு கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்ததுடன், திருச்சிலுவை திருப்பவனி ஆலயத்தை சுற்றி வலம் வந்து கொடியிறக்கப்பட்டு அன்னதானத்துடன் பெருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது.

இத்திருத்தலத்தில், ஆயர் பெற்றக்கனியினால்  1854ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இயேசுகிறிஸ்து மரித்த சிலுவையின் ஒரு சிறிய பகுதி  பாதுகாக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X