2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

மஹா கும்பாபிஷேகம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.சுகிர்தகுமார் 


அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலய ஜீர்னோத்தாரண பஞ்ச குண்டபட்ஷ மஹா கும்பாபிஷேகம் இன்று (08) நடைபெற்றது.

கடந்த 4ஆம் திகதி வாஸ்து சாந்தி கிரியைகளோடு ஆரம்பமாகி 07ஆம் திகதி நடைபெற்ற எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வுடனும்  8ஆம் திகதி இன்று சுபவேளை 9.10 தொடக்கம் 10.20 வரையுள்ள நேரத்தில் நடைபெற்றது.

கும்பாபிஷேக குடமுழுக்குடனும் தொடரும் 12நாள் மண்டலாபிஷேக பூஜை மற்றும்  20ஆம் திகதி நடைபெறும் சங்காபிஷேகத்துடன் இனிது நிறைவுறும்.

அன்னையின் சிறப்புமிக்க ஆலயத்தின் ஜீர்னோத்தாரண பஞ்ச குண்டபட்ஷ மஹா கும்பாபிஷேகம் ஆலய பூசகர் க.சிவராசா, இ.யோகானந்தம், கு.ரவீந்திரநாதன் ஆகியோர்களின் ஒத்துழைப்புடன்  பிரதிஷ்டா பிரதமகுரு சிவாகமகிரியாஜோதி சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் நடாத்தி வைத்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X