2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தேர்த்திருவிழா

George   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்

                                                                        
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாத சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.

வசந்த மண்டப பூஜையினையடுத்து சுவாமியின் திருச்சொரூபம் உள்வலம் கொண்டு வரப்பட்டு தேரில் வைக்கப்பட்டதினையடுத்து பஞ்சரதத்தின் வீதிவலம் ஆரம்பமானது.

ஆலயத்தின் பிரதம குருவும் தர்மகர்த்தாவுமான பிரம்ம ஸ்ரீ இ.குமார சுவாமி குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடை பெற்றன.

மூர்த்தி, தலம், தீர்த்தம், மூன்றும் ஒருங்கமைத்து சிறந்து விளங்கும் தலங்களில் ஒன்றாகவும் பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றும் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் இந்த ஆலயம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .