2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய தீமிப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 04 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எஸ்.எம்.முஜாஹித்


அம்பாறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த ஆலயங்களின் ஒன்றான அன்னமலை அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார மஹோற்சவ பெருவிழாவின் இறுதி நாள் தீமிப்பு  நேற்று புதன்கிழமை (03) நடைபெற்றது.

அன்னமலை அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பிரதமகுரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ சி.கோணாமலை, விஸ்வப்பிரம்ம ஸ்ரீ சா.சிவராசா பூசகர் ஆகியோர் தலைமையில் கிரியைகள் நடைபெற்றன. நேர்;திக் கடன்களை நிறைவேற்றி தேவதைகளுக்கு மடைப்பலி கொடுக்கப்பட்டது.

அம்பாளுக்கு பாளை சாற்றுதல் மற்றும் ஆயுத வழிபாட்டுடனான மங்கள வாழ்த்துப்பாடலுடன் அம்பாளின் அலங்கார உற்வகால இறுதி நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.

கடந்த 2014.08.26ஆம் திகதி செவ்வாய்கிழமை சுபவேளையில் திருக்கதவு திறத்தலுடன் ஆராம்பமாகிய கிரியாகால நிகழ்வுகள் இறுதி நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் பங்கேற்ற தீமிப்பு வைபவத்துடன் நிறைவுபெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .