2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

திருத்தல யாத்திரை ஆரம்பம்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எஸ்.எம்.முஜாஹித்


காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மண்டூர் முருகன் ஆலயத்தை நோக்கிய திருத்தல யாத்திரை இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் வேல்சாமி மகேஸ்வரன் குருக்கள் உள்ளிட்ட குழுவினர் இத்திருத்தல யாத்திரையில் பங்கு கொண்டனர்.

இத்திருத்தல யாத்திரையில் திராய்க்கேணி, அட்டப்பள்ளம், காரைதீவு, கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு பிரதேசங்களை சேர்ந்த 800ற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மண்டூர் முருகன் ஆலயத்தின் தீர்த்த உற்சவம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .