2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

முப்பத்துநான்கு வருடங்களின் பின் டொக்கையாட் பிள்ளையாரின் நகர்வலம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


கிழக்கு மாகாண கடற்படை தலைமை அலுவலகம் அமைந்துள்ள டொக்கையாட் கடற்படைத்தளத்தில் உள்ள,  டொக்கையாட் பிள்ளையாரின் நகர்வலம் 34 வருடங்களின் நேற்று சனிக்கிழமை (30) மாலை நடைபெற்றது.

கடற்படைத்தளத்தில் உள்ள வீதிகளில் நின்றிருந்த பெருமளவிலான கடற்படையினர்,  பிள்ளையாரை தரிசித்தனர்.

கடற்படைத்தளத்தில் இருந்து கடற்படைத்தள வீதி வழியாக சென்று, கந்தசுவாமி கோவில் வீதி வழியாக வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தை சென்றடைந்த பிள்ளையாருக்கு விஷேட ஆராதனைகள் மேற்கொள்ளப்ட்டன.

ஆலய வீதியை சுற்றி சுங்க வீதிவழியாக நீதிமன்ற வீதி ஊடாக சென்று நீதிமன்றசந்தியில் அமைந்துள்ள கோட்டடி முனியப்பர் ஆலயத்தை நகர்வலம் சென்றடைந்தது.

அங்கிருந்து மீண்டும் கடற்படைத்தள வீதி, மருத்துவமனைவீதி வழியாக திருகோணமலை பொது மருத்துவ மனை வளாகத்தில் அமைந்துள்ள அரசடி விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.

பின்னர் அங்கிருந்து டைக் விதி வழியாக  மீண்டும் நீதிமன்ற வீதி, கடற்படைத்தள வீதியை அடைந்து அங்கிருந்து ஆலயத்தைச் சென்றடைந்தது;.
கடற்படைத் தள வாயிலிலும். கந்தசுவாமி ஆலய முன்றலில் செல் இசை, நடன மாணவிகளின் நடன அளிக்கைகள் இடம்பெற்றன.

ஓய்வுபெற்ற கடற்படைத்தளபதி ஜெயந்த கொலம்பஹே கிழக்கு பிராந்திய   கடற்படைத்தளபதியாக  இருந்த போது 2012, 2013ஆம் வருடங்களில் பிள்ளையார் கடற்படைத்தளத்துக்குள் வீதிவலம் வந்திருந்தார்.

தற்போதய கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரொஹான் அமரசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய 30 வருடங்கின் பின்னர் பிள்ளையார் கடற்படைத்தளத்தில் இருந்து நகருக்கு வந்து சென்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .