2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

கருமாரியம்மன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, நொச்சிமுனை பிரதேசத்தில் கருமாரியம்மன் கோவில் நிர்மாணத்திற்காக அடிக்கல்லை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று வெள்ளிக்கிழமை நாட்டி வைத்தார்.

நொச்சிமுனை பிரதேச கருமாரியம்மன் கோவில் பரிபாலன சபை தலைவர் எஸ்.வசந்தகுமாரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன்,  பிரதியமைச்சரின் இணைப்பாளர் திருமதி ருத்மலர் ஞானபாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ள காணி தேசிய நீர்வழங்கல்; வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் எடுத்த முயற்சியால் இது தொடர்பான சர்ச்சை தீர்க்கப்பட்டு  கோவிலுக்காக பெற்றுக்கொடுக்கப்பட்டது.

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின்  நிதிப் பங்களிப்புடனும் மக்களின் பங்களிப்புடனும் இந்தக் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X