2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் 26ஆம் திகதி உற்சவம் ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி விஷேட பூசையின் பின் தீ மிதிப்பு வைபவத்துடன் உற்சவம் நிறைவடையவுள்ளது.

பாண்டிருப்பு மற்றும் முனைத்தீவு ஸ்ரீ வடப்திரகாளி அம்பாள் ஆலயங்களின் பிரதம பூசகர் செ.செல்வகுமார் தலைமையில்  இடம்பெறவுள்ள மேற்படி அலங்கார உற்சவப் பெருவிழாவானது, 09 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.

இப் பெருவிழாவில் 02ஆம் நாள் தொடக்கம் 05ஆம் நாள் வரை அம்பாள் வீதி வலம் வருதல் இடம்பெறும்.

ஞாயிற்றுக்கிழமை 06ஆம் நாள் - விசேட பூஜைகள், அன்னதானம் ஆகியவற்றினைத் தொடர்ந்து, சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து வாழைக்காய் எழுந்தருளப்பண்ணும் நிகழ்வும், அலங்கார பூசையும் நடைபெறும்.

இறுதி நாளான செப்டம்பர் 03 திகதி - தீமிதிப்பு வைபவத்துடன், பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா நிறைவடையும் ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X