2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

ஸ்ரீ விக்னேஸ்வர பெருமானின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

Thipaan   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 


அம்பாறை, கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வர பெருமானின் வருடாந்த ஆவணி சதுர்த்தி மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 29ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
ஆலய வருடாந்த உற்சவம் தலைவர் மூ.தாமோதரம் தலைமையில் 19ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமாகி 20ஆம் திகதி கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 09நாட்கள்; திருவிழா நடைபெற்று, 29ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவமும் 30ஆம் திகதி  பூங்காவன திருவிழாவும் 31ஆம் திகதி நடைபெறும் வைரவர் பூஜை ஆகியவற்றுடன் நிறைவுறும்.

இத்திருவிழாக்காலங்களில் ஆலயத்தில் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதுடன் கோளாவில் பிரதேசம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

இவ்வாறு சிறப்பு மிக்கதாக திகளும் ஆலயத்தின் 3ஆவது கும்பாபிஷேகம் அண்மையில் சிவஸ்ரீ க.கு சீதாராம் குருக்களின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X