2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புளியந்தீவு தூய மரியாள் பேராலயத்தின் திருவிழா

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்
, க.ருத்திரன்

மட்டக்களப்பு புளியந்தீவு தூய மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழா பங்குத்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ் தலைமையில் புதன்கிழமை (06) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன்போது ஜேசுசபை துறவி அருட்பணி ரி.சாகயநாதன் தலைமையில் திருவிழா முதல்நாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த ஆலயத்தின் நவநாள் திருவிழாவில் தினமும் திருச்செபமாலை, பிரார்த்தனை, திருப்பலி என்பன நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 5.30மணிக்கு துதிபுகழ் ஆராதனை மற்றும் நற்கருணை ஆசிர்வாதத்தை தொடர்ந்து விண்ணேற்பு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் திருவிழா கூட்டுத்திருப்பலி 15ஆம் திகதி காலை   ஒப்புக்கொடுக்கப்பட்டு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X