2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வயாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தில் உற்சவம்

Kogilavani   / 2014 ஜூலை 28 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள வயாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றது.

இக்கிராம மக்கள் கடந்த 1990 ஆண்டு இடம்பெயர்ந்ததன்  பின்னர் மேற்படி ஆலயத்தில் உற்சவம் நடைபெறாதிருந்த நிலையில், இம்முறை உற்சவத்தினை நடத்துவதற்கு யாழ்.மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயப் பெரேரா அனுமதியளித்தமையினைத் தொடர்ந்து உற்சவம் இடம்பெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை யாழ்.ஆயர் இல்லம் மேற்கொண்டிருந்தது.

உற்சவத்தினை யாழ்.மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை திருப்பலி ஒப்புக்கொடுத்து நடத்தி வைத்தார். 

இதில், ஆயர் இல்லக் குருமார்கள், பொதுமக்கள், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த உற்சவத்திற்கு வருகை தரும் மக்களின் நலன்கருதி, யாழ்ப்பாணம் புனிதசாள்ஸ் மகா வித்தியாலயம் பருத்தித்துறை புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் கோப்பாய் புனித மரியாள் ஆலயம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X