2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி வழிபாடு

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டிய வழிபாடு, கோட்டைமுனை மெதடிஸ்த தேவாலயத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்றது.
இதனையொட்டிய ஊர்வலம் மட்டக்களப்பு சென் அன்றூஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி நகர வீதிகளினூடாக மெதடிஸ்த தேவாலயத்தை சென்றடைந்தது.

நகரில் பல்சமய சூழலில் வாழும் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து திருச்சபை வேறுபாடுகளின்றி புரிந்துணர்வுடன் வாழ இவ்வழிபாடு ஒழுங்கு செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.

மெதடிஸ்த திருஅவை வடகிழக்கு சபா சங்கத் தலைவர் எஸ்.டி. தயாசீலன், அங்கிளிக்கன் திருச்சபையின் எஸ்.பி.நேசகுமார், அமெரிக்கன் சிலோன் மிசன், அங்கிளிக்கன், இரட்சியசேனை, மெதடிஸ்த, கத்தோலிக்க, தென்னிந்திய திருச்சபைகள், கிறிஸ்தவ சபைகளிக் குருமுதல்வர்கள், அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் இறைமக்கள் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X