2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடியமாவாசை தீர்த்தோற்சவ கொடியேற்றம்

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடார்ந்த ஆடியமாவாசை தீர்த்தோற்சவ திருவிழா சிவாகம வித்யா பூஷணம் சிவாச்சாரிய திலகம் கிரியாகாலமணி விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள்  தலைமையில் புதன்கிழமை (09)  கொடியேற்றதுடன் ஆடியமாவாசை தீர்த்தோற்சவ விழா ஆரம்பமானது.

இவ்விழா தொடர்ந்து 17 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதுடன் 26ம் திகதி காலை தீர்த்தோற்சவமும், 27ம் திகதி பூங்காவனத் திருவிழாவும் 28ம் திகதி வைரவர் பூஜையுடன் ஆடியமாவாசை தீர்த்தோற்சவம் நிறைவுபெறவுள்ளது.

ஆலய வரலாறு

 கி.மு 1ம் நூற்றாண்டில் தமிழ் மன்னன் எல்லாளனே முதன் முதலாக கற்கோயிலாக கருவரை விமானம் வரை அமைத்து திருப்பணியை ஆரம்பித்தான் என்றும் இவ்வாலயம் கலியுகம் தோன்றிய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்பு பெற்று விளங்கியதாகவும் அக்காலத்தில் வெண்நாவற் பதியென போற்றப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.அக்காலத்தில் சந்தன காமத்து சத்திரியர்கள் எனப்படும் ஜந்து பாண்டிய அரசர்களின் மானியம் பெற்று கட்டப்பட்டதுடன் இலங்கை தமிழ்,சிங்கள் மன்னர்களாலும் இவ்வாலயம் புணரமைக்கப்பட்டு வந்துள்ளது.

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய தாய் தந்தையரின் பிதுர் கடன் நிறைவேற்றும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவ திருவிழா இவ்வாலயத்தில் சிறப்பு வாய்ந்தொன்றாக கருதப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X