2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ கொட்டாம்புலைப் பிள்ளையார் ஆலய பாற்குட பவனி

Kanagaraj   / 2014 ஜூன் 24 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு-முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கொட்டாம்புலைப் பிள்ளையார் ஆலயத்தில் பாற்குட பவனி நேற்று திங்கட்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை திரு தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான அடியவர்கள் பாற்குடம் ஏந்தி முனைக்காடு அருள்மிகு ஸ்ரீP கொட்டாம்புலைப் பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தனர்.

பின்னர் அடியார்களின் அரோகரா கோஷத்துடன் பக்தி உணர்வோடு பாலபிஷேகம் இடம்பெற்று, முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ கொட்டாம்புலைப் பிள்ளையார் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் அண்மையில் இடம்பெற்றதை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் நிறைவுற்று இறுதி நிகழ்வான  1008 சங்குகளால் ஆன சங்காபிஷேக நிகழ்வும்  நேற்றயதினம் நடைபெற்றது.

கிரியைகள் யாவும்  சிவ ஸ்ரீ சச்சிதானந்தக் குருக்களின் தலைமையில் மேளதாள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா ஓசையுடன் மூலமூர்த்திக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சங்காபிஷேக நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைந்தமை குறிப்பிடத்தக்தாகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X