2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தாய்க்கொம்பு முறிக்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


பட்டிப்பளை பிரதேச செயலகம் மற்றும் கலாசார பேரவை ஆகியன இணைந்து நடாத்திய கொம்பு முறி நிகழ்வின் இறுதி அம்சமான தாய்க்கொம்பு முறிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (20) முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளரும் கலாசார பேரவைத் தலைவருமான திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலயத்தில் இருந்து வட சேரி, தென் சேரி கொம்புகள் ஏடகத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டு வீதி ஊர்வலமாக முதலைக்குடா கண்ணகியம்மன் ஆலயத்தை சென்றடைந்த பின்னர் அங்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நடைபெற்ற இவ் விளையாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான வசந்தன் கூத்து, காவடி ஆட்டம், கும்மி குரவை போடுதல் என பல நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X