2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் சங்காபிசேகம்

Kogilavani   / 2014 ஜூன் 18 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


அம்பாறை மாவட்டத்தின் வீரமுனையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் சங்காபிசேகம் செவ்வாய்க்கிழமை(17) நடைபெற்றது.

மகா மண்டபத்தில் 1008 எட்டு சங்குகள் அடுக்கப்பட்டு கும்பங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டதுடன் விசேட யாக பூசையும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பூசைசெய்யப்பட்ட பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய சீர்பாததேவியினால் பிரதிஸ்டை செய்யப்பட்ட விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சங்காபிசேகம் செய்யப்பட்டதுடன் விநாயகப்பெருமான் உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு காட்சியளித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X