2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

களுதாவளையில் கதிர்காம யாத்திரிகர்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 17 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


கதிர்காமத்தை நோக்கிய  மட்டக்களப்பு பாதயாத்திரைக்  குழுவினர் நேற்று திங்கட்கிழமை மாலை களுதாவளையை வந்தடைந்தனர்.

49 பேர் கொண்ட இக்குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நள்ளிரவு 12 மணிக்கு மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்ததாக குழுவின் தலைவர் எஸ்.யோகராஜா தெரிவித்தார்.

முருகப்பெருமானின் திருநாமங்ளை உச்சரித்தவாறும்  அரோகரா கோஷத்துடனும்; செல்லும் நாங்கள், முருகப்பெருமான் அருளினால் எந்தவித விக்கினங்களுமின்றி எதிர்வரும் 28ஆம் திகதி  கொடியேற்றத்தன்று கதிர்காமம் சந்நிதானத்தை அடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X