2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சொறிக்கல்முனை தூய அந்தோனியார் ஆலய திருவிழா

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.ஜே.எம்.ஹனீபா


அம்பாறை, நாவிதன்வெளிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 6ஆம் கொளணி சொறிக்கல்முனை பிரதேச தூய அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா  ஞாயிற்றுக்கிழமை(15) நடைபெற்றது.

கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருத்தல பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில மட்டக்களப்பு பேராலயத்தின் உதவி பங்குத்தந்தை ரவிகாந் அடிகளார் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.

இதன்போது புனித அந்தோனியாரின் உருவச்சிலையை தாங்கிய திருச்சொரூப பவனி உள்வீதி வலம் வந்தது.

இந்த நிகழ்வில் சொறிக்கல்முனை, மத்தியமுகாம், சம்மாந்துறை, வீரமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X