2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சித்தாண்டி முருகன் ஆலயத்தை வந்தடைந்த யாத்திரிகர்கள்

Kogilavani   / 2014 ஜூன் 03 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கதிர்காக கொடியேற்றத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமான்ஆறு பகுதியில் இருந்து நடைபாதையாக கடந்த 10 ஆம் திகதி புறப்பட்ட பக்த அடியார்கள் ஐம்பது (50) பேர் திங்கட்கிழமை(2)  வாழைச்சேனையூடாக சித்தான்டி முருகன் கோவிலை சென்றடைந்துள்ளனர்.

சித்தாண்டியை வந்தடைவதற்கு தங்களுக்கு 24 நாட்கள் சென்றுள்ளதாகவும் எதிர்வரும் 18ஆம் திகதி உகந்தை முருகன் கோவிலை அடைவதே எங்களது நோக்கம் என்று அக் குழுவிற்கு பொறுப்பாக செல்லும் எஸ்.மகேந்திரன் என்பவர் தெரிவித்தார்.
 
நடைபாதையாக கதிர்காம கொடியேற்றத்திற்குச் செல்லும் பக்த அடியார்கள் கோவில்களில் தங்களது ஆகாரங்களை முடித்துக் கொள்வதாகவும் எஸ்.மகேந்திரன் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .