2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பாதயாத்திரை

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

 
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியமுல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தலத்தை நோக்கிய பாதையாத்தரை நேற்று (09) மாலை நடைபெற்றது.
 
மட்டக்களப்பு புனித மரியாழ் இணைப் பேராலயத்திலிருந்து ஆரம்பமான இப்பாதையாத்திரை இன்று காலை பெரியமுல்லுமலை புனித செபமாலை அன்னை திருததலத்தை சென்றடைந்தது.
 
மட்டக்களப்பு புனித மரியாழ் இணைப்பேராலயத்தில் அருட்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ் நடாத்திய வழிபாடுகள் மற்றும் பிராத்தனையை தொடர்ந்து பாதையாத்திரை ஆரம்பமானது.
 
இந்த பாதயாத்திரை மட்டக்களப்பு, ஊறனி, ஏறாவூர் செங்கலடி, பதுளை வீதி ஊடாக சென்று பெரியமுல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தலத்தை அடைந்தது.
 
இதன் போது ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியமுல்லுமலை புனித செபமாலை அன்னை திருததலத்தில் வைகாசி திருவிழாவில் கலந்து கொள்ளும் பொருட்டே இப்பாதையாத்திரை நடைபெற்றது.
 
இங்கு வைகாசி திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (11) நாளை நடைபெறவுள்ளது.
 
கடந்த 28 வருடங்களுக்குப் பின்னர் மூன்றாவது வருடமாக இப்பாதையாத்திரை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .