2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வரலாற்று பழமை வாய்ந்த தூய செபமாலை அன்னை திருத்தலக் கொடியேற்றம்

Super User   / 2014 மே 06 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


வரலாற்று பழமை வாய்ந்த மட்டக்களப்பு பெரிய புல்லுமலை தூய செபமாலை அன்னை திருத்தல திருவிழா கொடியேற்ற நிகழ்வானது திங்கட்கிழமை (05) மாலை பங்குத்தந்தை அருட்பணி டக்ளஸ் ஜேம்ஸ் தலமையில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்பணி டக்ளஸ் ஜேம்ஸ், தாண்டவன்வெளி பங்குத்தந்தை அருட்பணி சி.வி.அன்னதாஸ் இவர்களுடன் இணைந்து வட்டார பிரதிநிதிகளால் கொடியேற்ற நிகழ்வு  நடைற்றது.
 
தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்கு மக்களால் முதலாம் நவநாள் திருப்பலி வெகு சிறப்பாக சிறப்பிக்கப்பட்டதுடன் திருப்பலியை அருட்பணி சி.வி.அன்னதாஸ் ஒப்புக்கொடுத்தார்.
 
தொடர்ந்து தினமும் மாலை நவநாட்கள் நடைபெறுவதுடன் மாலை அன்னையின் திருச்சொரூப பவனி நற்கருணை ஆசீர்வாதம் என்பன இடம்பெற்று மறுநாள் காலை 7.30 மணிக்கு அருட்தந்தை நோயல் இம்மானுவல் அடிகளாரால் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொடி இறக்கத்துடன் நிறைவுபெறும்.

அன்னையின் திருத்தலம் நோக்கிய பாத யாத்திரையானது 9ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு புளியந்தீவு தூய மரியாள் பேராலயத்திலிருந்து புறப்பட்டு திருமலை வீதியூடாக செங்கலடி கறுத்தப்பாலம் பதுளை வீதி வழியாக மறுநாள் காலை அன்னையின் ஆலயம் சென்றடையும்.

ஆன்று காலை 8.00 மணிக்கு யாத்திரை வந்தவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றப்படும்.

1904ஆம் ஆண்டு முதலாவது பாத யாத்திரையானது அன்றைய பங்குத்தந்தையாக பணியாற்றிய இயேசு சபைத் துறவி அருட்தந்தை எர்வாட் அடிகளாரின் கீழ் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பதுளை வீதியில் அமைந்துள்ள இவ் தேவாலயம் யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .