2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மண்கும்பான் பள்ளி வாசலின் கொடியேற்றத் திருவிழா

Kogilavani   / 2014 மே 02 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணம் வெள்ளைக் கடற்கரை மண்கும்பான் பள்ளிவாசலின் கொடியேற்ற நிகழ்வு வியாழக்கிழமை (01) அஸர் தொழுகையின் பின்னர் ஆரம்பமானது.

இதனை தொடர்ந்து  மஃரீப் தொழுகையினை அடுத்து மௌலூத்உம் தலைசிறந்த மார்க்க அறிஞர்களினால் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வானது மண்கும்பான் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சங்கைக்குரிய அஸ்-ஸெய்யித்.அஷ்ஷெய்க்  சுல்தான் அப்துல் காதரின் (றஹ்) ஞாபகார்த்தமாக வருடாவருடம் இடம்பெறுகின்றது.

தொடர்ந்து இறுதி நாளான ஹிஜ்ரி ஆண்டு 1435 ரஜப் பிறை 12 மே மாதம் 12 ம் திகதியன்று காலை 7.30 மணிக்கு குர்ஆன்
தமாமும்இதுஆபிராத்தனையும் நடைபெற்று பகல் நாரிசாவும் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வின் போது மௌலவி சிராஜுதீன் நஜாஹி,மௌலவி தாஜுதீன், அஸீஸ் மௌலவி, மௌலவி முபாறக் நஜாஹி உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .