2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் 'சித்திரைச் செவ்வாய் முளைகொட்டு' விழா

Suganthini Ratnam   / 2014 மே 01 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் மாவட்டத்தின் உடப்பு பிரதேசத்தில் 'சித்திரைச் செவ்வாய் முளைகொட்டு' விழாவின் ; இறுதி விழா  நேற்று புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

தொன்றுதொட்டு கலை, கலாசாரத்தை பேணிவரும் உடப்பு பிரதேசத்தில் சித்திரைச் செவ்வாய் நிகழ்வு வம்சாவழியாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

நவதானியங்களை முளைக்கு இட்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு அந்த நவதானியங்களுக்கு 10 வயதுக்குட்பட்ட கன்னிப் பெண்கள் காலை, மாலை வேளைகளில்  நீருற்றி பக்குவமாக வளர்த்துவருவர்.  இறுதிநாளான்று  படையல் செய்து முளைத்தானியங்களை நீரில் கரைத்து விடுவார்கள்.
மழை வேண்டியும் நோய்கள் ஏற்படாவண்ணம் அம்மனிடம் வேண்டி  இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .