2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புதிய ஆலயம் திறப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, புல்லுமலை கோப்பாவெளியில் புதிய ஆலயம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் திங்கட்கிழமை(28) மாலை அபிஷேக திருப்பலியுடன் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, புதிய பீடத்திற்கு வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு புதிய ஒளி ஏற்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத்திருப்பலியில் ஆயருடன் இணைந்து அருட் தந்தையர்களான மறை மாவட்ட குரு முதல்வர் பிரான்சிஸ் சேவியர் டயஸ், அக்கறைப்பற்று ஆலய பங்கு தந்தை என்டனி ஜெயராஜ், பங்கு தந்தை டக்லஸ் ஜேம்ஸ், ஹெகட் பணிப்பாளர் அருட் தந்தை கிரைடன் அவுஸ்கோன், ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர்.

இவ்வாலயம் ஷாப் இன்ரநெஷனல் நிறுவன அதிகாரிகளான எ.ஜி.சுரேஷ் மரியாம்பிள்ளை, பி.பெர்னாண்டோ ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆலய திறப்பு விழாவுக்கு, கோப்பாவெளி, ஆயத்தியமலை, புல்லுமலை பங்கு மக்களும், கோப்பாவெளி ஊர் மக்களும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .