2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நாவுக்கரசரின் குருபூசை தினம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசை தினம் ஞயிற்றுக்கிழமை (27) வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கோறளைப்பற்று இந்து மகாசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தினத்தை முன்னிட்டு கறுவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்னறலில் இருந்தும் வாழைச்சேனை வீரயடி விநாயகர் ஆலய முன்னறலில் இருந்தும் வந்த எழுச்சி ஊர்வலம் வாழைச்சேனை கைளாயப் பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்து அங்கு பூசை இடம்பெற்றதன் பின்னர் இந்துக் கல்லூரியில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

கோறளைப்பற்று பிரதேச செலகப் பிரிவில் உள்ள அறநெறி பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகள்; இடம்பெற்றதோடு மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கோறளைப்பற்று இந்து மகாசபையின் தலைவர் சிவநெறிப் புரவலர் பி.புண்ணியமூர்த்தி தலைமையில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி விபுலானந்தா மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்குடா வலயக் கல்வி அலுவலக வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா, மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் எம்.பவளகாந்தன், கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்
கே.எஸ்.ஆர்.சிவகுமார், ஓய்வுபெற்ற அதிபர் எம்.தவராஜா மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .