2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

Kogilavani   / 2014 மார்ச் 21 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


லிந்துலை, சென்ரெகுலர்ஸ் தோட்ட ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா வெள்ளிக்கிழமை(21) புனித கங்கையில் கரகம் பாலித்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு இடம்பெறவுள்ள இத்திருவிழாவில்,  22ஆம் திகதி சனிக்கிழமை பாற்குட பவனியும் கணபதி ஓமமும்;; ஸ்ரீ முத்துமாரி அம்மன் வீதியுலாவும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவிளக்கு பூஜையும் வசந்த மண்டப பூஜையுடன் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்துமாரி அம்மனின் இரதோற்சவமு இடம்பெறவுள்ளது. 

மேலும் 24ஆம் திகதி திங்கட்கிழமை அம்பாள் திரு ஊஞ்சல் இட்டு திருதாலாட்டு பாடல், காவல் தெய்வங்களுக்கு விசேட பூஜைகள் என்பன இடம்பெறவுள்ளன. 

இறுதி நாளான 25ஆம் திகதி காட்டேரி அம்மன் திருவிழாவும், மகேஷ்வர பூஜையும் அன்னதானமும் நடைபெற்று மஞ்சல் நீராடலுடன்; திருவிழா நிறைவுபெறவுள்ளது.

கிரியைகள் யாவும் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ கணகராஜ் சர்மா மற்றும் சிவஸ்ரீ ராஜேஸ்சர சர்மா ஆகியோரின்  தலைமையில் நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .