2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புளியம் பொக்கணை நாகதம்பிரான் பொங்கல்

Kogilavani   / 2014 மார்ச் 17 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திலுள்ள புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று திங்கட்கிழமை (17) இரவு நடைபெறவுள்ள நிலையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொருட்கள் மீசாலை வடக்கு நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி ஆலய சூழலிலுள்ள வயல்களில் விளைந்த நெல் மற்றும் தானியங்களை மீசாலைப் பகுதியில் கொடுத்து அங்கிருந்து பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேற்படி ஆலயத்தில் இன்று நடைபெறவுள்ள பொங்கல் விழாவினையொட்டி பெருமளவான பக்தர்கள் வருகை தரவுள்ளமையினால் அப்பகுதியில் கண்டாவளை பிரதேச சபையினால் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினால் 800 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .